ஐ.சி.டி.எஸ் துறையில் 20 ஆண்டுகள் மற்றும் 30 ஆண்டுகள் பணி நிறைவு செய்த அனைத்து தகுதியுள்ள அங்கன்வாடி பணியாளர்களுக்கும், உதவியாளர்களுக்கும் அரசு உத்தரவின் அடிப்படையில் வழங்கப்பட வேண்டிய சிறப்பு இங்கிரிமெண்டை தாமதமின்றி வழங்கிடவும் ஒரே பணி நிலையில் 32 ஆண்டுகள் பணி நிறைவு செய்துள்ள மூத்த சகோதரிகளுக்கு அதற்கான சிறப்பு இங்கிரிமென்டை உடனடியாக வழங்கிடவும் அரசு உத்தரவை மேற்கோள் காட்டி நமது சங்கத்தின் சார்பில் ஐ.சி.டி.எஸ் இயக்குநர் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதம் உங்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது!இக்கடிதத்தின் நகல்கள் மாண்புமிகு. தமிழக சமுக நலத்துறை அமைச்சர் , தமிழக அரசின் தலைமைச் செயலாளர், சமுக நலத்துறைச் செயலாளர் மற்றும் சமுக நலத்துறை ஆணையர் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இதனை சங்க வித்தியாசம் பார்க்காமல் அனைத்து அங்கன்வாடி சகோதரிகளுக்கும் பகிரவும்! அங்கன்வாடி சகோதரிகளின் உரிமைகளைப் பெறுவதற்கு நமது சங்கம் சாதி, மதம், இனம், மொழி, பிராந்திய வித்தியாசங்களுக்கு அப்பாற்பட்டு, எப்போதும் உணர்வுப்பூர்வமாக குரல் கொடுத்து கொண்டே இருக்கும்!ஜூன் 9 ஆம் நாள் சேலத்தில் நடைபெற உள்ள நமது சங்கத்தின் 2 வது மாநில மாநாட்டுக்கு தயாராவோம்! பங்கேற்போம்!! கோரிக்கைகள் அனைத்தையும் வென்றெடுப்போம்!!!உங்கள் அன்புச் சகோதரன்,வே. வேலுசுவாமிபொதுச்செயலாளர்,தமிழ் நாடு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் முன்னேற்ற சங்கம்