An Initiative of International Labour Organization and Supported by CTUs
அருமைச் சகோதரிகளே, அனைவருக்கும் வணக்கம்! நமது நீண்ட நாள் கோரிக்கைகளின் மீது மேலும் காலம் கடத்தாமல் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல முறை மாண்புமிகு. அமைச்சர் , இயக்குநர், துறைச்செயலாளர், மற்றும் கமிஷனர் ஆகியோருக்கு நாம் கடிதம் எழுதியதோடு அவற்றை அவ்வப்போது உங்களிடையே பகிர்ந்தும் வருகிறோம்! இன்று நமது சங்கத்தின் சார்பில் , நமது சங்கத்தின் மாநிலப்பொருளாளர் அருமைச்சகோதரி திருமதி. நா. கோமளா மற்றும் சென்னை மாவட்ட தலைவர் அன்புச் சகோதரி. திருமதி. கற்பகம் ஆகியோர் நமது இயக்குநர் மாண்பமை. மெர்சி ரம்யா ஐ.ஏ.எஸ் அவர்களைச் சந்தித்து, நமது கோரிக்கைப்பட்டியலை மீண்டும் அளித்து, அவற்றை தாமதமின்றி உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டும் என்று வற்புறுத்தினர். நமது இயக்குநர் அவர்கள் பெரும்பாலான கோரிக்கைகளை நிறைவேற்றித்தருவதாக கூறியுள்ளார் என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஆர்ப்பாட்டம் இல்லாமல் அலப்பறைகள் இல்லாமல் நமது சகோதரிகளின் கோரிக்கைகளை கேட்கும் விதத்தில் கேட்டால் நிச்சயம் அவை பரிசீலிக்கப்படும்! அவை நிறைவேற்றப்படும் ! எனவே , நமது ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவோம்! வெற்றி பெறுவோம்!! உங்கள் அன்பு அண்ணன், வே. வேலுசுவாமி, பொதுச்செயலளர், தமிழ் நாடு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் முன்னேற்ற சங்கம் & அகில இந்திய அமைப்புச் செயலாளர், தொமுச பேரவை.