An Initiative of International Labour Organization and Supported by CTUs
கடந்த 07.11.24 மற்றும் 08.11.2024 ஆகிய இரு நாட்களில், ஹரியானா மாநிலம் மானேசரில் அமைந்துள்ள பார்க்கின் -பை- ரேடிசன் ஹோட்டலில் ஐ எல் ஓ ஏற்பாட்டில் நடைபெற்ற தேசிய தொழில் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கிய குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தொமுச பேரவையின் அகில இந்திய பொதுச் செயலாளர் மானமிகு அண்ணன் மு. சண்முகம் எம்பி அவர்களின் வழிகாட்டுதலில் தொமுச பேரவையின் சார்பில் தேசிய தொழில் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கிய குழுவின் ஒருங்கிணைப்பாளரும், பேரவையின் அமைப்புச் செயலாளருமான திரு வே.வேலுசுவாமி அவர்களுடன் பேரவைத் துணைத் தலைவரும், ஒடிசா மாநில தொமுச தலைவருமான திரு. பிரேந்திர பிரசாத் தாஸ், பேரவையின் செயலாளர் வழக்கறிஞர் .திரு வி .பி .வினோத்குமார்
தேசிய தொழில் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கிய குழுவின் உறுப்பினர்களான திருமதி நா. கோமளா மற்றும் வழக்கறிஞர் சுதா பிர்லா ஆகியோர் கலந்து கொண்டனர் .
தொழில் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம் சம்பந்தமாக தொமுச பேரவை எடுத்துள்ள முன்னெடுப்புகளை விளக்கி இக்கருத்தரங்கில் நமது பிரதிநிதிகள் உரையாற்றினர்.
விரைவாக பேரவையுடன் இணைந்துள்ள இணைப்பு சங்கங்களிலும் தொழில் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கிய குழுக்களை அமைப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ஐ.எல்.ஓ வின் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது!
அதனை ஏற்று தொமுச பேரவையின் அகில இந்திய பொதுச் செயலாளர் மானமிகு அண்ணன் மு .சண்முகம் எம்பி அவர்களது வழிகாட்டுதலில் இப்பணி நிறைவேற்றப்படும் என்று தொமுச பேரவையின் சார்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.