An Initiative of International Labour Organization and Supported by CTUs
கடந்த 9ஆம் தேதி சேலத்தில் நமது மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 30 தீர்மானங்களின் தொகுப்பை இன்று மாண்புமிகு சமூக நலத்துறை மற்றும் பெண்கள் உரிமை துறை அமைச்சர் முத்து நகர் தந்த சொத்து, அன்புச் சகோதரி .திருமதி. கீதா ஜீவன் அவர்களை சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்து, வழங்கி 21.06.2024 அன்று தமிழக சட்டமன்றத்தில் சமூக நலத்துறைக்கான மானிய கோரிக்கை நிறைவேற்றப்பட இருக்கின்ற சூழலில் நாம் முன் வைத்திருக்கக்கூடிய கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம்!
மாண்புமிகு அமைச்சர் அவர்களும் நமது கோரிக்கைகளை நிச்சயமாக பரிசீலனை செய்வதாக உறுதி அளித்துள்ளார்.
வே.வேலுசுவாமி
மாநில பொதுச் செயலாளர்,
தமிழ்நாடு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் முன்னேற்ற சங்கம்
&
அகில இந்திய அமைப்பு செயலாளர், தொமுச பேரவை