ஐ.எல்.ஓ-வின் முன்முயற்சி மற்றும் மத்திய தொழிற்சங்க அமைப்புகளால் ஆதரிக்கப்படுகின்ற அமைப்பு!
இந்த மையம் தொழிலாளர்கள் தொடர்புடைய தற்போதைய தொழிலாளர் சந்தை, முக்கியமான தொழிலாளர் சட்டங்கள், பல்வேறு மாநில அரசுகளின் தற்போதைய குறைந்தபட்ச ஊதியங்கள், நலத்திட்டங்கள் பற்றிய முழுமையான அறிவு ஆகிய இருவழி தொடர்பை உறுதி செய்வதற்கு அவசியமான அனைத்து தகவல்களையும் நாம் பகிர்ந்து கொள்ளக்கூடிய தளமாகும்.
தமிழக மாநில அரசு மற்றும் ஒன்றிய அரசாங்கத்துடன், அதற்கான நடைமுறைகள் அரசாங்கத்தின் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் முன்னணி நிறுவனங்கள், தமிழ்நாடு மாநில அரசு மற்றும் பிற மாநில அரசு, இந்திய அரசு மற்றும் வெளிநாடுகளிலிருந்து பெறப்படும் வேலைவாய்ப்பு திட்டங்கள் ஆகிய நன்மைகளைப் பெற தொழிலாளர்களுக்கு உதவுவது இந்த அமைப்பின் முக்கிய அம்சமாகும்.
இவ்வமைப்பு முதலாளி மற்றும் பணியாளர்கள் இருவரும் பின்பற்ற வேண்டிய தொழில் பாதுகாப்பு, உடல்நலம் பற்றிய தகவல்களை வழங்குகிறது. கோவிட்-19 உள்ளிட்ட பல்வேறு தொற்று நோய்களுக்கு எதிராக டைபிடிக்கப்பட வேண்டிய நெறிமுறைகளை பற்றிய தகவல்களை வழங்குகிறது.
பல்வேறு துறைகள், தொழிற்சங்கங்கள் மற்றும் அரசு சாரா அமைப்புகள் போன்றவற்றிலிருந்து சேகரிக்கப்பட்ட துல்லியமான, சரியான மற்றும் பயனுள்ள தகவல்களை வழங்குவதன் மூலம் தொழிலாளர் வர்க்கத்திற்கு வசதியான தொழில்முறை வாழ்க்கை வாழவும் வழி நடத்த உதவுவதுமே இவ்வமைப்பின் முக்கிய நோக்கமாகும் !